தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், பிப்ரவரி 24, 2015

என் நூல் அகம் 4

 
மதுரை பதிவர் விழாவில் ஆவியைப் பார்த்தேன் பயந்து விடாதீர்கள் வலைப்பதிவர் கோவை ஆவி அவர்களைத்தான் சிறிய வயதிலும் யாரிடமும் பழகத் தெரிந்த பெரிய மனிதர் எனக்கு தனது ‘’ஆவிப்பா’’ என்ற தனது நூலை கையொப்பமிட்டுத் தந்தார் படித்தேன், தேன், ஆம் அனைத்தும் தேன் ஹைக்கூ கவிதைகள் குயிலைப் போல் கூக்கூக்வென கூவியிருக்கிறார் இந்த ஆவி.

நான் மிகவும் ரசித்தவை பல அதில் தங்களுக்குத் தருகிறேன் சில...

ஒற்றை வார்த்தையில்
ஒரு பாடல்
சரிகமபத நீ

என் இனிய செந்தமிழ் குடித்த காலம் தொட்டு நான் கேட்டு வளர்ந்த வார்த்தை இது சரிகமபதநி ஆவி ஒரு நொடியில் தனது காதலிக்கு தாரை வார்த்து விட்டாரே... இனி சங்கீத வித்துவா(ன்)ர்கள் கத்துவார்களே ! அய்யகோ நான் என்ன ? பதிலுரைக்க... பதிலறியா பாவியானேனே இந்த ஆவியால்.

என் சக போட்டியாளன்...
நீ கிடைக்காத வருத்தத்தில்
உன் காபியில் விழுந்து
உயிர் விட்ட ‘’’’

‘’’’ கூடப் போட்டியா ?

உன் இரக்க குணத்திற்க்கு
அளவே இல்லையா ?
இரண்டாய் வெட்டப்பட்ட
வெங்காயத்திற்க்கு கூட
கண்ணீர் அஞ்சலி செய்கிறாய் !

ஆவியே, இது அயல் தேசங்களில் வாழும் பேச்சளர்களுக்கும் பொருந்துமா ?

அவள் முகம் காட்டினாள்
என் காய்ச்சல் பறந்தது...
அவள் புன்னகை சிந்தினாள்
என் நிம்மதி தொலைந்தது...

ஆவியே, இது உங்களுக்குமா ?

கோலமயில் நீ
கோலம் போடும்
கோலத்தை காண
கண்ணுறக்கமில்லாமல்
அலங்கோலமாய் நான் ! !

ஆவியே, அலங்கோலமா ?

எழுத்தாணி தோன்றி
டெக்னாலஜி தோன்றா காலத்தே
முன் தோன்றிய பா
இந்தக் காதல்ப் ‘’பா’’

படிக்கும் நமக்கும் ஆமாப்பா என்று சொல்ல வைக்கிறது இன்னும் எழுதவே ஆசை இது ஆவிப்பா ஆகி விடக்கூடாதே.. போதும்ப்பா என நினைக்கிறேன். (ஆமாப்பா, ஆளவிடப்பா... யாரப்பா ? அது இடையிலே, கருப்பா)

‘’ஆவி’’க்கும் காதல் வருமா ? எமக்கு ஆச்சர்யமாக இருந்தது. அத்தனையும் கவித்தேன் சொந்த அனுபவத்தில் நொந்த அனுபவமோ என்னவோ படிக்கும்போது... எமக்கு அந்த உணர்வு வந்த-து. எந்த உணர்வும் வரவில்லையென்று யாரும் சொல்ல முடியாது சொன்னால் சொன்னவர் ஆவியே அந்த அளவுக்கு ஆவி, ச்சே மனிதர் உணர்ந்து எழுதி இருக்கிறார்.
 
மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் ‘’காதல் மன்னன்’’ பட்டம் ஏன் ? சும்மா கிடப்பில் கிடக்கின்றது அதை எடுத்து நமது கோவை ஆவிக்கு கொடுத்தால் என்ன ? வாத்தியாரே சரிதானே....
 
ஆகவே ஆவியின் ஆவிப்பாவை படிக்க ஆத்மார்த்தமாய் ஆவண செய்யும் உங்கள்.
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

எனது மற்ற விமர்சனங்களை படிக்க கீழே இணைப்புகளை சொடுக்குக...
 

92 கருத்துகள்:

  1. உங்கள் ரசனையை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள் கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம் ஸார்.

      நீக்கு
  2. "ஆவி "புரிந்த
    ஹைக் கூ புன்னகையால்
    'மெய்'
    சிலிர்த்தது மெய்!

    ஆவியே!
    புவிக்குள் புகுந்தது
    உனது
    புகழ்!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுவை வேந்தனின் புதுக்கவிதைக்கு நன்றி ''பா''

      நீக்கு
  3. பாவரிகளில் பகிர்ந்த கருத்துகள்
    ஆவியின் ஆவிப்பா பற்றியறிய
    நலமாக உதவியது நண்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலங்கை வேந்தனின் இளங்கவிக்கு நன்றி ''பா''

      நீக்கு
  4. கில்லர்ஜி எனக்கு இந்த மாதிரிக் காதல் பாக்களை எழுதுவது சுலபம் என்று தோன்றுகிறது. அதுவும் ஓரளவு அனுபவம்( காதலித்து) இருந்தால் எழுதிவிடலாம். நீங்கள் படித்து ரசித்த நூல் எனக்கு கிடைதால் நானும் ரசிப்பேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கு நன்றி இதை நண்பர் திரு. ஆவி அவர்கள் பார்த்தால் தங்களுக்கு அனுப்பி வைப்பார்...

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே!

    சிறந்த நூல் விமர்சனம். நீங்கள் குறிப்பிட்ட ஹைக்௬ வரிகளின் சொல்லாடல் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கிறது. அருமையாக விமர்சித்த தங்களுக்கும், அற்புதமாக அதை உருவாக்கிய திரு. கோவை ஆவி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.! அவரது நூல் கிடைத்தால் நிச்சயமாக வாங்கி படிக்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் விஸ்தாரமான கருத்துரைக்கும் நன்றி சகோ...

      நீக்கு
  6. நூல் அறிமுகத்தோடு கூடிய நண்பர் அறிமுகம். தங்களது பாணியில் சிறப்பாக விமர்சித்துள்ளீர்கள். நூலைப் படிக்க ஆவல் எழுகிறது. இவ்வாறான நூலை எழுதிய ஆசிரியருக்கும், அதனை விமர்சித்த தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  7. உங்கள் நடையில் அழகிய அருமையான விமரிசனம்!..

    { இன்றைக்கு எங்கே சாம்பசிவத்தைக் காணோம்!?..}

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே... அவரும் தன்னோட பொழைப்பை பார்க்க வேண்டாமா ?எங்கேயாச்சும் போயிருக்கும், வரும், ஆனா வராது.

      நீக்கு
  8. வெங்காயத்திற்குக் கூட
    அஞ்சலி
    அருமையான கவிதைத் தொகுப்பின்
    விமர்சனமும் அருமை நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  9. உங்கள் ரசனையை அழகான பதிவாக கொடுத்திருக்கீங்க சூப்பர் சகோ.

    பதிலளிநீக்கு
  10. ஆஹா காதல் மன்னன் பட்டம் கொடுத்து விடலாம்..... நல்ல யோசனை தான் சொல்லி இருக்கீங்க கில்லர்ஜி!

    நானும் எனது பக்கத்தில் இப்புத்தகம் வாசித்த அனுபவம் எழுதி இருக்கிறேன் -

    ஆவி எழுதிய கவிதை - http://venkatnagaraj.blogspot.com/2014/02/blog-post_27.html

    முடிந்தால் வாசித்துப் பாருங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி இதோ வருகிறேன் நண்பரே.....

      நீக்கு
    2. கலாய்க்கறாங்களா நிஜமா சொல்றாங்களான்னே தெரியலையே.. வெங்கட்ஜி நீங்களுமா?

      நீக்கு
  11. இவரு குறும்படம் எடுத்திருக்காராமே?



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே //காதல் போயின் காதல்// அவசியம் பாருங்கள். இதோ இணைப்பூ....

      https://www.youtube.com/all_comments?v=qdT9bM4jebw

      நீக்கு
    2. ஆமாங்க.. முதல் முயற்சி.. பார்த்துட்டு சொல்லுங்க.

      நீக்கு
  12. வணக்கம்
    ஜி
    புத்தகம் பற்றி தங்களின் பார்வையில் மிக சுவையாக சொல்லியுள்ளீர்கள் என்னையும் படிக்க தூண்டுகிறது பகிர்வுக்கு நன்றி ஜித.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. நூல் விமர்சனம் அழகு! நானும் ஆவிப்பாவை படிக்க ஆவலாக உள்ளேன்! ஆவிக்கு மெயில் அனுப்பிவிட வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் அதைச் செய்யுங்கள் நண்பரே...

      நீக்கு
    2. இன்பாக்ஸில் அட்ரஸ் சொல்லுங்க நண்பா.. நான் கோவை சென்றதும் அனுப்பி வைக்கிறேன். :)

      நீக்கு
  14. ரசனையும் கிண்டலும் உங்க எழுத்தில் ஊறி இருப்பதை பார்க்கிறேன் ஜீ...

    ஆவி என்றதும் நானும் பயந்து தான் போனேன். ஆனால் படித்தப்பின் தான் தெரிந்தது. அது என் தம்பி ஆனந்தை பற்றி அவன் எழுதிய காதல் குட்டி ஹைக்கூ கவிதைகளை பற்றி மிக அழகாய் உங்களுக்கே உரிய விதத்தில் ரசனையாய் எழுதி இருக்கீங்க....

    சங்கீதத்தில் இருக்கும் ஸ்வரங்கள் சரிகமபத நீ காதலிக்கு தாரை வார்த்த ஒரே ஜீவன் கண்டிப்பா நீங்க சொன்னது போல் என் தம்பி ஆனந்தா தான் இருக்கும்..

    ரசிக்க வைக்கும் எழுத்துகளால் ஹைக்கூக்களாய் தொகுத்த ஆனந்தின் எழுத்தை வியந்து பாராட்டி விமர்சனம் என்ற பெயரில் மீண்டும் ஒரு பாராட்டு பத்திரமாய் அமைத்த உங்கள் எழுத்துகள் அற்புதம் ஜீ....

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ஆவி என்னும் ஆனந்துக்கும், அழகாய் விமர்சித்த ஜீ உங்களுக்கும்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிண்டலா ? ஏன் ? நண்பருக்கு போட்டு கொடுக்குறீங்க... வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. அக்கா, இப்படி அடிக்கடி கண்ணை வேர்க்க வச்சுடறீங்க.. :)

      நீக்கு
  15. itho anuppuren , Atho anuppurennu 6 maasama Yemathitte iruukaru AAvEE . Neenga vera Vimarsanam Yeluthi innum en Yekkattha Athigapaduthittinga Anna ,

    TM+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைபர் கோர்ட்டில் வழுக்கு தொடுங்க நண்பா....

      நீக்கு
    2. சத்தியமா உன்னை இப்போ தான் நினைச்சேன் மேக்னேஷ்.. நான் உங்க ஷைனிங் ஸ்டார் பட வேலையா சென்னை வந்துட்டதால அனுப்ப முடியல. கோவை சென்றதும் அனுப்பிடறேன்.. மன்னிச்சூ

      நீக்கு
    3. கில்லர்ஜி - தொடுக்கறது தான் தொடுக்கறீங்க நல்ல கோர்ட்டுல தொடுக்க கூடாதா? ஒய் சைபர் கோர்ட்? ;)

      நீக்கு
  16. ஆவியின் ஆவிப்பா காதல்க்கவிதை. ஆழ்ந்துபடிக்கும். ஆவலில்நானும் அயல்தேசத்தில் காத்துஇருக்கின்றேன்! அருமையான விமர்சனம்நண்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்கள் நண்பா ? வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. நேசன், விரைவில் ஸ்ரீலங்கா பயணம் ஒன்று உத்தேசித்திருக்கிறேன். அங்கே உள்ள என் நண்பரிடம் கொடுத்து உங்களிடம் சேர்க்க சொல்கிறேன்.. :)

      நீக்கு
  17. அழகுக் 'கண் 'ணியை ஆவிப் பாவின் நடுவில் ரசிக்க மறந்து விட்டீங்களே :)
    த ம 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணியா ? கன்னியா ? ஜி

      நீக்கு
    2. அட்டைப் படக் கண் அழகிதான் ....அந்த கன்னிக்கு திருமணம் ஆனதால் ,கனவுக் கன்னி அந்தஸ்தை இழந்து விட்டாரோ :)

      நீக்கு
  18. சரிகமபத'நீ' ரொம்ப அழகு
    உங்கள் விமர்சனமும் அழகோ அழகாய் ஆவலை தூண்டுகின்றன.
    தம+1

    பதிலளிநீக்கு
  19. கண்டிப்பாக கோவை ஆவி அவர்களுக்கு “காதல் மன்னன்” பட்டதை கொடுக்க நான் வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை நீங்களாவது அதைச்செய்யிங்க.... நண்பா.

      நீக்கு
    2. 'வலி'ப்போக்கன், வழிமொழிகிறீர்களா? இல்லை 'வலி'மொழிகிறீர்களா?

      நீக்கு
  20. அன்புள்ள ஜி,

    நானும் கோவை ஆவியின் ஆவிப்பா நானும் வாங்கி வந்தேன். படித்தேன்... பாராட்டினேன்! தங்களின் பாராட்டுதலும் மிகப் பொருத்தமே! தாங்கள் கொடுக்க நினைத்த பட்டம் மிகவும் பொருத்தமானதே!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரையை மட்டும் அருமையாக கொடுத்த மணவையாருக்கு நன்றி.

      நீக்கு
  21. அழகான நூல் அறிமுகம் அண்ணா...

    பதிலளிநீக்கு
  22. வருகைக்கு நன்றி நண்பரே,,,,,

    பதிலளிநீக்கு
  23. ரசித்து ரசித்து ஆவி எழுதிய கவிதைகளை
    பயப்படாமல் ரசித்து ரசித்து விமர்சித்து இருக்கிறீர்கள்
    அதுவும் உங்கள் ஸ்டைலில் சூப்பர் சகோ.

    கவிதைகள் சூப்பராக இருக்கிறது...வாய்ப்பு கிடைக்கும் போது வாசித்து மகிழ்கிறேன். தம் 13

    பதிலளிநீக்கு
  24. நானும் ஆவிப்பா படித்து ரசித்தேன். 'சரிகமபத நீ ' - அட, ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான், ஹாஹா.
    வெங்காயத்திற்கு கண்ணீர் அஞ்சலி வெளிநாட்டு குடும்பத்தலைவர்களுக்கும் பொருந்தும் சகோ ;)
    இனிய பாக்களுக்கு நல்ல விமர்சனம்...பகிர்விற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி - வெளிநாட்டில் எதற்குப் பஞ்சம் வெங்காயத்திற்கா? தேவதைகளுக்கா? :P

      நீக்கு
    2. நன்றி கிரேஸ்

      நீக்கு
    3. வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி சகோ.

      நீக்கு
    4. To, ஆவி
      இரண்டுக்குமே பஞ்சமில்லை, பஞ்சமில்லை, பஞ்சம் 80 இல்லையே...

      நீக்கு
  25. ரசனையான விமர்சனம்...

    நமது இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  26. காதல் மன்னனா? அவ்வ்வ்வ்வ்வ்!! ரொம்ப நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து பட்டத்தை பெற்றுக்கொண்டமைக்கு நன்றி நண்பா.... நம்ம வாத்தியாரை காணோமே...

      நீக்கு
  27. இப்படி எல்லாம் காதல் கவிதை வருகிறது எனும் போதே தெரியும் ஆவி தான் என்று. ஒருவேளை தங்களுக்குள்ளும் ஆவி ஏறிவிட்டதோ? விமர்சனம் எக்கச்சக்கம். அருமை. என் பக்கத்தில் நந்தவனபூக்கள் தங்களை அழைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சகோ இதோ வருகிறேன் பூக்களைப்பறிக்க... கோடரியோடு...

      நீக்கு
    2. பூவைப் பறிக்க கோடரி எதற்கு? Killergee கீழ் உள்ளதைப் படிக்கவும்.

      நீக்கு
  28. நாங்கள் ஆவிப்பா வெளியிட்ட தினத்தன்று அங்குதானே இருந்தோம்....வாசித்து விமர்சனமும் எழுதினோம்...எங்கள் தளத்தில்....

    சரிகம "ப"..பா.......ஆவிப்பா....
    ரிகமத....நீ......(ங்கள்) அதனை

    கம கம என்று

    பத ம் செய்து

    தநி ஆவர்த்தனமாய்

    ஸ...ஸ..... என்று உச்சஸ்தாயியில் அழகாய் வருவது போல விமர்சனம் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க பஸ் இப்பத்தான் கிடைச்சுதோ....

      நீக்கு
  29. ஆவி உமக்குள் இருப்பது மட்டும் உண்மை. இல்லையென்றால் இப்படியா? அருமையான விமர்சனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  30. மீண்டும் நண்பர் கோவை ஆவிக்கு“ காதல் மன்னன்” பட்டம் வழங்க வழி மொழிகிறேன்..

    பதிலளிநீக்கு
  31. ஆவிப்பா விமர்சனம் அருமைப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  32. தமிழின் முன்னணி பதிவர்களில் ஒருவராகி விட்டீர் வாழ்த்துக்கள் தோழர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழரின் வருகைக்கும், மனம் நிறைந்த வாழ்த்துக்கும் வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  33. லேட்டா வர்றதுலயும் சில சமயங்கள்ல ஒரு சௌகரியம். எல்லாரோட கருத்தை‘யும் படிச்சு முடிச்சுட முடியுது. இத்தனை பேர் ஆவிப்பாவை ரசிச்சு தங்களின் ஆசிப்பாக்களை ஆனந்துக்கு வழங்கியிருக்கறது பாக்க ஆனந்தமா இருக்கு. ‘காதல் மன்னன்’ பட்டத்தைப் பொறுத்த வரையில ஆவிக்கு அதைத் தரலாமான்னு சொல்ல வேண்டியது நம்ம ஷைனிங் சீனு மட்டுமே ஐயா... ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  34. கோவை ஆவி..எப்போதிலிருந்து “ஆவிப்பா” ஆனார்.

    பதிலளிநீக்கு
  35. நூலின் அடுத்த பதிப்பில் தங்கள் பதிவையே முன்னுரையாக பிரசுரிக்கலாம். நூல் விமர்சனம் வித்தியாசமான அணுகுமுறையில்.... வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு